நடிகர் | சிவகார்த்திகேயன் |
நடிகை | அனு இம்மானுவேல் |
இயக்குனர் | பாண்டிராஜ் |
இசை | இமான் |
ஓளிப்பதிவு | நீரவ் ஷா |
வைத்தியராக இருக்கும் பாரதிராஜாவின் பேரன் சிவகார்த்திகேயன். இவர் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா சமுத்திரகனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயன் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தன்னுடைய தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தனது கெத்தை காட்ட நினைக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடுகிறார்.
ஆனால், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத நிலையில், நட்டி ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். சிவகார்த்திகேயனுடன் உள்ள ஒரு முன்பகையை மனதில் வைத்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார் நட்டி.
இறுதியில் இதை எப்படி சிவகார்த்திகேயன் சமாளித்தார்? அண்ணன், தங்கை பாசம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி அடுத்து இது, அடுத்து அது என்று தெரியும்படி இருப்பது.
அனு இமானுவேல் கதாபாத்திரம் இன்னும் கூட கொஞ்சம் நன்றாக வடிவமைத்திருக்கலாம், அதை விட யார் யாருக்கு சொந்தம் என்ன முறை என்பதை கொஞ்சம் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டுப்பிள்ளை, சிவகார்த்திகேயனின் மாஸ் கம்பேக்.